"தே.ஜ., கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்": அடித்து சொல்கிறார் அமித்ஷா
"தே.ஜ., கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்": அடித்து சொல்கிறார் அமித்ஷா
UPDATED : பிப் 10, 2024 01:58 PM
ADDED : பிப் 10, 2024 12:46 PM

புதுடில்லி: 'வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
இது குறித்து அமித்ஷா கூறியதாவது: லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்து எந்த சந்தேகமும் இல்லை. பார்லிமென்டில் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் தான் அமரப் போகிறோம் என்பதை காங்கிரஸ் உணர்ந்துள்ளது. இது காங்கிரசின் கூட்டணி கட்சிகளுக்கும் தெரியும். வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும். இந்திய பிரிவினைக்கு காரணமான காங்கிரசை சேர்ந்த ராகுலுக்கு நீதி யாத்திரை செல்ல எந்த உரிமையும் இல்லை.
370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததால், மக்கள் பா.ஜ.,வுக்கு 370 தொகுதிகளில் வெற்றியை கொடுத்து ஆசீர்வதிப்பார்கள். காங்கிரஸ் ஆட்சியின் போது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ராமர் கோவில் கட்ட அனுமதிக்கப்படவில்லை. இவ்வாறு அமித்ஷா கூறினார்.