''விவசாயிகளின் ஒத்துழைப்போடு தன்னிறைவு பெறுவோம்'': அமித்ஷா நம்பிக்கை
''விவசாயிகளின் ஒத்துழைப்போடு தன்னிறைவு பெறுவோம்'': அமித்ஷா நம்பிக்கை
UPDATED : ஜன 04, 2024 01:46 PM
ADDED : ஜன 04, 2024 01:16 PM

புதுடில்லி: ''விவசாயிகளின் ஒத்துழைப்போடு 2027ம் ஆண்டு டிசம்பருக்கு முன்பு, பருப்பு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெறுவோம்'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டில்லியில் நடந்த கருத்தரங்கில் அமித்ஷா பேசியதாவது: வரும் நாட்களில் விவசாயத் துறையில் மாற்றங்களைக் கொண்டு வருவோம். உளுத்தம்பருப்பு உற்பத்தி செய்வதில் நாம் தன்னிறைவு அடைந்துள்ளோம் என்பது உண்மைதான். மீதம் உள்ள பருப்புகளை இன்றும் இறக்குமதி செய்கிறோம்.
தண்ணீர் வளம் பெருகும் இந்தியா போன்ற விவசாய நாட்டில், சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன நிலையில் பருப்பு வகைகளை இறக்குமதி செய்வது மரியாதைக்குரியது அல்ல. அதனால்தான் பிரதமர் மோடி தடை விதித்துள்ளார். விவசாயிகளின் ஒத்துழைப்போடு 2027ம் ஆண்டு டிசம்பருக்கு முன் பருப்பு உற்பத்தியில் நாம் தன்னிறைவு பெறுவோம் என்று நான் உறுதியளிக்கிறேன். உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.