"உறவை வலுப்படுத்த விருப்பம்": தென் ஆப்ரிக்கா அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
"உறவை வலுப்படுத்த விருப்பம்": தென் ஆப்ரிக்கா அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ADDED : ஜூன் 17, 2024 05:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: தென் ஆப்ரிக்காவின் அதிபராக, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிரில் ராமபோசாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தென் ஆப்ரிக்காவின் அதிபராக சிரில் ராமபோசா (வயது 71) இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிரில் ராமபோசாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் விரும்புகிறேன். தென் ஆப்ரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிரில் ராமபோசாவுக்கு வாழ்த்துக்கள்''. இவ்வாறு மோடி கூறியுள்ளார்.