பலத்த காற்றால் கீழே விழுந்து நொறுங்கிய 35 அடி உயர சிவாஜி சிலை: எட்டே மாதத்தில் சேதம்
பலத்த காற்றால் கீழே விழுந்து நொறுங்கிய 35 அடி உயர சிவாஜி சிலை: எட்டே மாதத்தில் சேதம்
ADDED : ஆக 26, 2024 05:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை: மஹாராஷ்டிராவின் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பரில் பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை, பலத்த காற்று காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது.
இந்திய கடற்படை தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடற்படை சார்பில், கடந்தாண்டு டிசம்பர் 4ம் தேதி மஹாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில், 35 அடி உயர சத்ரபதி சிவாஜியின் உருவச் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இந்த நிலையில், இன்று (ஆக.,26) பலத்த காற்றின் காரணமாக, சிவாஜயின் சிலை கீழே விழுந்து நொறுங்கியது. இதில் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என்றாலும், திறக்கப்பட்டு எட்டே மாதத்தில் சிலை சேதமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.