டில்லியில் மேலும் 350 மின் பஸ்கள் கவர்னர், முதல்வர் கொடியசைத்து துவக்கம்
டில்லியில் மேலும் 350 மின் பஸ்கள் கவர்னர், முதல்வர் கொடியசைத்து துவக்கம்
ADDED : பிப் 14, 2024 09:52 PM

புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று மேலும் 350 மின்சார பஸ்கள் இயக்கம், துவக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து, டில்லியில் இயங்கும் மின்சார பஸ்களின் எண்ணிக்கை, 1,650 ஆக உயர்ந்துள்ளது.
புதுடில்லியில் மாசு அளவைக் கட்டுப்படுத்த டீசலில் இயங்கும் பஸ்களுக்கு பதிலாக, மின்சார பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனால் எரிபொருள் செலவும் வெகுவாக குறைந்தது.
டில்லியில் ஏற்கனவே 1,300 மின்சார பஸ்கள் இயங்கி வந்த நிலையில் நேற்று, மேலும் 350 பஸ்கள் துவக்கப்பட்டன.
துணைநிலை கவர்னர் சக்சேனா, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் ஆகியோர் கொடியசைத்து, 350 மின்சார பஸ்களை துவக்கி வைத்தனர்.
இதையடுத்து, டில்லியில் இயங்கும் மின்சார பஸ்களின் எண்ணிக்கை, 1650 ஆக உயர்ந்துள்ளது.
நிகழ்ச்சிக்குப் பின், நிருபர்களிடன் பேசிய கவர்னர் சக்சேனா, ''இந்த மின்சார பஸ்களால் காற்று மாசு சற்று குறையும்,'' என்றார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ''நாட்டிலேயே அதிகளவில் மின்சார பஸ்களை இயக்கும் முதல் மாநகரம் என்ற பெருமையை, டில்லி பெற்றுள்ளது. தற்போது துவக்கப்பட்டுள்ள 350 பஸ்கள் வாயிலாக, டில்லியில் இயக்கப்படும் மின்சார பஸ்களின் எண்ணிக்கை, 1,650 ஆக உயர்ந்துள்ளது.
''காஸ் மற்றும் டீசல் வாயிலாக இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைப்பதே டில்லி அரசின் நோக்கம்,'' என்றார்.

