3வது டி-20 கிரிக்கெட் போட்டி: 26 ரன்களில் இங்கிலாந்து வெற்றி
3வது டி-20 கிரிக்கெட் போட்டி: 26 ரன்களில் இங்கிலாந்து வெற்றி
UPDATED : ஜன 28, 2025 10:35 PM
ADDED : ஜன 28, 2025 09:16 PM

ஆமதாபாத்: ராஜ்கோட்டில் நடைபெற்ற 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் 26 ரன்களில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 172 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
173 ரன்கள் வெற்றி இலக்காகக்கொண்டு அடுத்து களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணி 26 ரன்களில் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணி, 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
சக்ரவர்த்தி ராஜ்ஜியம்
முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணியினர், 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தனர். இந்தியாவுக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த போட்டியில் 4 ஓவர் வீசி 24 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி வருண் சக்ரவர்த்தி அசத்தினார்.
மூன்றாவது போட்டி இன்று குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில் நடைபெற்றது. இந்த போட்டியில்,இங்கிலாந்து அணி,26 ரன்களில் வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் ஹர்திக் பாண்ட்யா அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் சோபிக்கவில்லை.இங்கிலாந்து தரப்பில் ஜமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளையும், ஆர்ச்சர் மற்றும் ப்ரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.