ADDED : டிச 24, 2024 03:39 AM
ஹிசார் : ஹரியானாவில் ஹிசார் மாவட்டத்தின் புதானா கிராமத்தில் செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர், குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில் அங்கு பணியாற்றிய தொழிலாளர்களின் குடும்பத்தினர், செங்கல் சூளை அருகே நேற்று முன்தினம் இரவு துாங்கினர்.
அப்போது, அங்கு அடுக்கப்பட்டிருந்த செங்கல் சுவர், துாங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது. இதில் சுராஜ், 9, நந்தினி, 5, விவேக், 9, ஆகிய மூன்று குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மூன்று மாத குழந்தை நிஷா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் உத்தர பிரதேசத்தில் அம்பேத்கர் நகர் மாவட்டத்தின் பாதவ் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.