உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 28, 2026 11:10 PM
அ நிறம் | அளவு
ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள கிர் வனப்பகுதி, 1,412 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு தேசியப் பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயம் உள்ளன. ஆசிய சிங்கங்கள் இயற்கையான சூழலில் உலவும் ஒரே இடம் இந்த கிர் வனப்பகுதி மட்டுமே.
கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, குஜராத்தில் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை, 891 ஆக இருந்தது. இந்நிலையில், இங்கு அடுத்தடுத்து, 4 சிங்க குட்டிகள் உயிரிழந்துள்ளன. உண்ணிகள் மூலம் பரவும், 'பெபசியா' நோய் தொற்று காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
எனவே அப்பகுதியில் சுற்றித்திரிந்த, 17 சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. சிங்கங்களின் திடீர் இறப்பு குறித்து, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் நேற்று முன் தினம் காந்திநகரில் அவசர ஆலோசனை நடத்தினார்.
