யாத்கிரில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
யாத்கிரில் மின்னல் தாக்கியதில் ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி
ADDED : செப் 24, 2024 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யாத்கிர்: கர்நாடகாவில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நேற்று மாலை யாத்கிர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
ஜினகேரா கிராமத்தில் நேற்று மாலை விவசாய நிலத்தில் ஏழு பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். திடீரென மழை பெய்ய துவங்கியதால், அனைவரும் விவசாய நிலம் அருகில் உள்ள முருகம்மா தேவி கோவிலில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த கோவில் குடிசையால் ஆனது. சிறிது நேரத்தில் மின்னல் தாக்கியது. இதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த சுனிபாய் ராத்தோட், 27, கேஷன் ஜாதவ், 25, சன்னப்பா ஜாதவ், 18, நேனு ஜாதவ், 15, ஆகியோர் உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த மற்ற மூவரை, அங்கிருந்த சிலர் மீட்டு, மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

