ADDED : நவ 22, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
20 நாட்களில் 4 பேருக்கு
டெங்கு காய்ச்சல் பாதிப்பு
ஈரோடு, நவ. 22-
ஈரோடு மாநகராட்சி பகுதியில், கடந்த 20 நாட்களில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பில்
உள்ளனர்.
இதுகுறித்து நகர்நல அலுவலர் கார்த்திகேயன் கூறியதாவது: மாநகராட்சியில், 11 ஆரம்ப சுகாதார நிலையம், 17 நகர்ப்புற நலவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது சூழலியல் மாற்றத்தால், காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு அதிகரித்துள்ளது. போதிய மருந்துகள் இருப்பில் உள்ளன. கடந்த, 20 நாட்களில் நான்கு பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.