உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : மே 12, 2026 11:28 PM
அ நிறம் | அளவு
ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டம் கம்லா நகரை சேர்ந்த கன்ஹா,22, மெஹக்,19, ரியா,17, மற்றும் விக்கி,11, ஆகிய நான்கு பேரும், நேற்று காலை 9:00 மணிக்கு யமுனை நதியில் குளித்தனர். ஆழமான பகுதியில் நான்கு பேரும் மூழ்கினர்.
தகவல் அறிந்து வந்த போலீசார், உள்ளூர் மக்கள் உதவியுடன் கன்ஹா, மெஹக் மற்றும் ரியா ஆகியோரை முதலில் மீட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் மூவரும் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதி செய்தனர். ஆறு மணி நேர தேடுதலுக்கு பின், விக்கி உடல் மீட்கப்பட்டது.
