மாணவியை பலாத்காரம் செய்த மந்திரவாதி உட்பட 4 பேர் கைது
மாணவியை பலாத்காரம் செய்த மந்திரவாதி உட்பட 4 பேர் கைது
ADDED : ஜன 28, 2025 12:49 AM

திருவனந்தபுரம் : சரியாக படிப்பு வரவில்லை என்பதற்காக மந்திரவாதியிடம் அழைத்துச் செல்லப்பட்ட மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 62 வயது மந்திரவாதி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் அடூரைச் சேர்ந்த 17 வயது மாணவி பள்ளியில் வழங்கிய கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார். அதில் தனக்கு சிலர் ஏழாம் வகுப்பு படிக்கும் போதிருந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவது பற்றி தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
பாதிப்புக்கு உள்ளான மாணவி ஏழாம் வகுப்பு படிக்கும் போது படிப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை. இதைத்தொடர்ந்து அத்திக்காட்டு குளங்கரையை சேர்ந்த பதர்சமன் 62, என்ற மந்திரவாதியிடம் பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். அப்போது அந்த மந்திரவாதி பெற்றோரை அறைக்கு வெளியே இருக்குமாறு கூறிவிட்டு மாணவியை அறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தார். தொடர்ச்சியாக மேலும் 4 பேர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். இதில் அவரது பள்ளியில் படிக்கும் சில மாணவர்களும் இருந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து மந்திரவாதி பதர் சமன் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.