கூட்ட நெரிசலை தவிர்க்க கும்பமேளாவுக்கு 4 சிறப்பு ரயில்
கூட்ட நெரிசலை தவிர்க்க கும்பமேளாவுக்கு 4 சிறப்பு ரயில்
ADDED : பிப் 16, 2025 09:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை தொடர்ந்து கும்பமேளாவுக்கு 4 சிறப்பு ரயில்களை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.
டில்லி ரயில் நிலையத்தில், மகா கும்ப மேளாவுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டத்தால் திடீர் நெரிசல் ஏற்பட்டது. இதில் 18 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.
கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து சிறப்பு உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.
இந்நிலையில் கூட்ட நெரிசலை குறைக்க பிரயாக்ராஜ் செல்லும் பக்தர்களின் வசதிக்காக 4 சிறப்பு ரயில்களை மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.