மணிப்பூரில் வீட்டில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
மணிப்பூரில் வீட்டில் பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ADDED : நவ 05, 2025 01:53 AM

மணிப்பூர்: மணிப்பூரில் கிராமத்தில் உள்ள வீட்டில் பதுங்கியிருந்த நான்கு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இட ஒதுக்கீடு தொடர்பாக, கூகி - மெய்டி பிரிவினரிடையே, 2023 மே மாதம் மோதல் வெடித்தது.
இதையடுத்து ஏற்பட்ட கலவரத்தில் பலர் கொல்ல ப்பட்டனர். மணிப்பூரில் பதற்றத்தை தணித்து, அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் மற்றும் கூகி, சோமி உள்ளிட்ட 24 பழங்குடி அமைப்புகள் இடையே, சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் யு.கே.என்.ஏ., எனப்படும் ஐக்கிய கூகி தேசிய ராணுவம் என்ற பயங்கரவாத அமைப்பு பங்கேற்கவில்லை. கடந்த மாத இறுதியில், சுராச்சந்த்பூர் மாவட்டத்தில் யு.கே.என்.ஏ., அமைப்பினர் கிராம தலைவர் ஒருவரை தாக்கிக் கொன்றனர். மேலும் அந்த கிராமத்தில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நி லையில், யு.கே.என்.ஏ., பயங்கரவாதிகள் 17 பேர் கான்பி கிராமத்தில் பதுங்கியிருப்பதாக, துணை ராணுவப் படையான அசாம் ரைபிள்ஸ் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று காலை அங்கு விரைந்த படையினர், ஒரு வீட்டை சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒருவர் சிக்கிய நிலையில், மற்றவர்கள் தப்பியோடினர். அ வர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள் ளது.

