கடலில் மூழ்கி சுற்றுலாப் பயணிகள் 4 பேர் பலி; கேரளாவில் சோகம்
கடலில் மூழ்கி சுற்றுலாப் பயணிகள் 4 பேர் பலி; கேரளாவில் சோகம்
ADDED : ஜன 27, 2025 08:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோழிக்கோடு: கேரளாவில் கடலில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
வயநாட்டில் உள்ள கல்பேட்டா பகுதியில் 'பாடி ஷேப்' எனும் ஜிம்மில் அனீஷா என்பவர் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவரது ஜிம்மில் இருப்பவர்கள் தங்களின் குடும்பத்தினருடன் சேர்ந்து, கோழிக்கோடுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு திக்கோடி பகுதியில் இருந்த பீச்சில் சுற்றுலா சென்றவர்களில் 5 பேர் குளித்துள்ளனர். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்றதால், அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். அதில், பைசல்,42, பினீஷ்,45, அனீஷா,38, வாணி,32, ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஜின்ஷி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்புத்துறையினரின் உதவியுடன், உயிரிழந்தவர்களின் உடல்களை தேடி வருகின்றனர்.