sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மசாஜ் சென்டர்' பெயரில் விபசாரத்தில் ஈடுபடுத்திய 44 இளம்பெண்கள் மீட்பு!':பெங்களூரில் போலீஸ் வேட்டையில் 34 பேர் கைது

/

மசாஜ் சென்டர்' பெயரில் விபசாரத்தில் ஈடுபடுத்திய 44 இளம்பெண்கள் மீட்பு!':பெங்களூரில் போலீஸ் வேட்டையில் 34 பேர் கைது

மசாஜ் சென்டர்' பெயரில் விபசாரத்தில் ஈடுபடுத்திய 44 இளம்பெண்கள் மீட்பு!':பெங்களூரில் போலீஸ் வேட்டையில் 34 பேர் கைது

மசாஜ் சென்டர்' பெயரில் விபசாரத்தில் ஈடுபடுத்திய 44 இளம்பெண்கள் மீட்பு!':பெங்களூரில் போலீஸ் வேட்டையில் 34 பேர் கைது

6


ADDED : ஜன 08, 2024 06:56 AM

Google News

ADDED : ஜன 08, 2024 06:56 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரில் மசாஜ் சென்டர் பெயரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட, வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உட்பட 44 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். மசாஜ் சென்டர் உரிமையாளர், உல்லாசமாக இருந்தவர்கள் என, 34 பேர் கைது செய்யப்பட்டனர். பெண் போலீஸ் அதிகாரி ஒருவரின் கணவர் உதவியுடன் விபசாரம் நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் தயானந்தா விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளார்.

தகவல் தொழில்நுட்ப நகரம், பூங்கா நகரம், ஐ.டி., நிறுவனங்களின் நகரம் உட்பட பல்வேறு புனைப்பெயர்களால், கர்நாடக தலைநகராக உள்ள பெங்களூரு அழைக்கப்பட்டு வருகிறது. எந்த அளவுக்கு பெங்களூரு நல்ல பெயர் எடுத்து உள்ளதோ, அதை அளவுக்கு கெட்ட பெயரும் எடுத்து உள்ளது.

போதைப்பொருள் விற்பனை, பெண்களுக்கு பாலியல் தொல்லை, அதிக குற்றச் சம்பவங்கள் நடக்கும் நகரம் பட்டியலிலும், பெங்களூருக்கு இடம் உள்ளது. நகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க, போலீசார் எவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும், கட்டுக்குள் கொண்டு வரவே முடியவில்லை.

வெளிநாட்டு பெண்கள்


இந்நிலையில், சமீபகாலமாக மசாஜ் சென்டர் பெயரில் விபசார தொழில், பெங்களூரில் கொடிகட்டி பறக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே உள்ள கட்டடத்தில் விபசாரம் நடந்த அதிர்ச்சி சம்பவமும் அரங்கேறியது.

இந்நிலையில் மசாஜ் சென்டர் பெயரில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 44 இளம்பெண்கள் மீட்கப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

அதுபற்றிய விபரம்: பெங்களூரு ஓல்டு மெட்ராஸ் ரோடு டின் பேக்டரியில், நிர்வனா இன்டர்நேஷனல் மசாஜ் சென்டர் உள்ளது.

இந்த மசாஜ் சென்டரில், விபசாரம் நடப்பதாக, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்து இருந்தது. இதனால் அந்த மசாஜ் சென்டரை போலீசார் கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு, மசாஜ் சென்டருக்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு போலீசார் அங்கு சோதனை நடத்தினர். ஆறு மாடி கட்டடத்தில் அமைந்துள்ள மசாஜ் சென்டரில் ஒன்று மற்றும் ஆறாவது மாடியில் உள்ள 40க்கும் மேற்பட்ட அறைகளில், போலீசார் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட வெளிநாட்டு, வெளிமாநில இளம்பெண்கள், 44 பேர் மீட்கப்பட்டனர்.

இவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய, மசாஜ் சென்டர் உரிமையாளரான ஐதராபாதை சேர்ந்த அனில், இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்க வந்த, 33 பேர் கைது செய்யப்பட்டனர். மீட்கப்பட்ட இளம்பெண்கள், பெங்களூரில் உள்ள பெண்கள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

போலீஸ் அதிகாரி


உல்லாசமாக இருக்க வந்த 33 பேர், மசாஜ் சென்டர் உரிமையாளர் அனிலை, மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு சென்று, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கி தருவதாக கூறி, வெளிநாடு, இந்தியாவின் பல மாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை பெங்களூரு அழைத்து வந்ததும், வேலை வாங்கி தராமல் வலுக்கட்டாயப்படுத்தி, விபசாரத்தில் தள்ளியதும் தெரியவந்துள்ளது.

அனிலிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொரோனா காலத்திலும் இந்த மசாஜ் சென்டரில் விபசாரம் அரங்கேறியதும், போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் தெரிந்து உள்ளது. இவ்வளவு நாட்கள் விபசாரம் நடந்தும், போலீசாருக்கு இதுபற்றி தகவல் கிடைக்கவில்லையா என்று கேள்வி எழுந்து உள்ளது.

ஆனால், அதே நேரத்தில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவரின் கணவர் உதவியுடன், மசாஜ் சென்டரில் விபசாரம் நடந்ததாகவும், இதனால் போலீசார் கண்டுகொள்ளவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் தயானந்தா, விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து மகாதேவபுரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி உள்ளது.






      Dinamalar
      Follow us