ADDED : நவ 28, 2024 02:41 AM

சபரிமலை:பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் முதல் சன்னிதானம் வரை 48 இன்டர்நெட் வைபை ஸ்பாட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவிதாங்கூர் தேவசம்போர்டும் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இணைந்து தடையில்லா இன்டர்நெட் சேவை கிடைப்பதற்கு 48 வைபை ஸ்பாட் ஏற்படுத்தியுள்ளன.
அலைபேசியில் உள்ள வைபை ஆப்ஷனை ஆன் செய்தால் அதில் பி.எஸ்.என்.எல்., வைபை வரும். அதில் பப்ளிக் வைபை கிளிக் செய்து அவர்களது அலைபேசி எண்ணை கொடுக்கும் போது ஓ.டி.பி. அனுப்பப்படும். அதன் பின் இணைப்பு கிடைக்கும்.
முதல் அரை மணி நேரம் இலவசம். அதன் பின் தேவைப்பட்டால் கட்டணம் செலுத்தி டேட்டா பெற வேண்டும்.
சபரிமலை சன்னிதானத்தில் சரங்குத்தி கியூ காம்ப்ளக்ஸ், நடைப்பந்தல், எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்., திருமுற்றம், ஆடிட்டோரியம். அன்னதான மண்டபம், அப்பம் அரவணை கவுன்டர், மாளிகைபுறம் கோயில் அருகே உள்ள அரவணை கவுன்டர், மாளிகைப்புறம் திடப்பள்ளி, தேவசம் காவலர் அறை, பொதுப்பணி பில்டிங், சபரிமலை பி.எஸ்.என்.எல். எக்சேஞ்ச், ஜோதி நகர் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம், தேவசம் ஊழியர் விடுதி என 23 ஸ்பாட்கள் உள்ளன. பம்பையில் 12, நிலக்கல் பகுதிகளில் 13 ஸ்பாட்கள் உள்ளன.