நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் நடத்திய சோதனையில், ஐந்து பெட்டிகளில் 11 கிராம் எடையிலான ஹெராயின் போதைப்பொருள் மற்றும் 10,000 'யாபா' போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதவிர, அவற்றை பதுக்கி வைத்திருந்த ஒரு பெண் உட்பட ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சர்வதேச மதிப்பு 3.08 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது.

