sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 வெளிநாட்டு சொகுசு கார்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

/

 வெளிநாட்டு சொகுசு கார்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

 வெளிநாட்டு சொகுசு கார்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் கைது

 வெளிநாட்டு சொகுசு கார்கள் கேரளாவுக்கு கடத்தப்பட்ட வழக்கில் 5 பேர் கைது


ADDED : மார் 08, 2026 01:58 AM

Google News

ADDED : மார் 08, 2026 01:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொச்சி: நம் அண்டை நாடான பூட்டானில் இருந்து பயன்படுத்தப்பட்ட சொகுசு கார்களை சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடத்தி, போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்து விற்பனை செய்த வழக்கில், கேரளாவின் கொச்சி சுங்கத்துறை ஐந்து பேரை கைது செய்தது.

வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்களுக்கு, 100 முதல் 200 சதவீதம் வரை சுங்கவரி விதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க, பூட்டானில் ராணுவ அதிகாரிகள் பயன்படுத்திய, 'லேண்ட் க்ரூஸர், லேண்ட் ரோவர்' உள்ளிட்ட சொகுசு கார்களை ஒரு கும்பல் நம் நாட்டுக்குள் கடத்தி வந்து அதை உள்நாட்டிலேயே சட்டவிரோதமாக பதிவு செய்து விற்பனை செய்தது.

கேரளாவில் மட்டும் இதுபோன்று கடத்தி வரப்பட்ட சுமார் 200 கார்கள் பயன்பாட்டில் இருப்பது, அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து கொச்சி சுங்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு, 'ஆப்பரேஷன் நும்கோர்' என்ற பெயரில் விசாரணையை துவக்கினர்.

கே ர ளாவில் பல இடங்களில் நடத்தப்பட்ட சோதனையி ல் 36 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிரபல திரைப்பட நடிகர்களிடம் இருந்த வாகனங்களும் இதில் சிக்கின.

இந்த வழக்கு தொடர்பாக அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் போலீசார் மற்றும் சுங்கத்துறை இணைந்து நடத்திய விசாரணையில், ஐந்து பேரை கைது செய்தனர். இதில், ஒருவர் அசாம் மாவட்ட போக்குவரத்து அதிகாரியாக உள்ளார். அவர்களிடம் நட த்திய விசாரணையில், போலி ஆவணங்களை பயன்படுத்தி, 460 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டதை கண்டறிந்ததாக அசாம் போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us