sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்; நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டார் சீமான்

/

தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்; நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டார் சீமான்

தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்; நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டார் சீமான்

தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள்; நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டார் சீமான்

72


ADDED : மார் 19, 2026 11:43 AM

Google News

ADDED : மார் 19, 2026 11:43 AM

72


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்துக்கு சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரி என 5 தலைநகரங்கள் ஏற்படுத்தப்படும் என தேர்தல் வாக்குறுதியில் சீமான் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். அதன் விபரம் பின்வருமாறு:

* தமிழகத்துக்கு சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கன்னியாகுமரி என 5 தலைநகரங்கள் ஏற்படுத்தப்படும்.

சென்னை- தொழில்நுட்ப தலைநகரம்

திருச்சி- நிர்வாக தலைநகரம்

கன்னியாகுமரி- மெய்யியல் தலைநகரம்

மதுரை- மொழி, கலை மற்றும் பண்பாட்டு தலைநகரம்

கோவை- தொழில், வணிக தலைநகரம்

2. சட்டசபை, பார்லிமென்டில் பெண்களுக்கு தனித்தொகுதிகள் போராடி பெறப்படும்.

3. 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு பார்லிமென்ட் தொகுதி பெற மத்திய அரசை வலியுறுத்துவோம்.

4. ஜனாதிபதியை மக்களே தேர்வு செய்ய அரசியலமைப்பு சட்டத்தை திருத்தம் செய்வோம்.

5. மாநிலங்களுக்குள் ஓடும் ரயில்களின் நிர்வாகத்தை அரசியலமைப்பு திருத்தத்துடன் கையகப்படுத்துவோம்.

6. படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும்.

7. ஜாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டை ஒழித்து தமிழ்க்குடிகளுக்கு இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிப்போம்.

8. மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.

9. தேர்தலில் ஓட்டளிப்பது கட்டாயமாக்கப்படும்.

capitals, TamilNadu, Chennai, Trichy, Coimbatore, Madurai, Kanyakumari, Seeman, election, தலைநகரங்கள், தமிழ்நாடு, சீமான், நாம்தமிழர் கட்சி, நாதக சீமான்






      Dinamalar
      Follow us