ADDED : செப் 28, 2025 05:46 AM

குருகிராம்: ஹரியானாவின் குருகிராமில் அதிவேகமாக வந்த, 'தார்' ஜீப், சாலை தடுப்பில் மோதியதில் ஐந்து பேர் பலியாகினர்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் என ஆறு பேர் ஹரியானாவின் குருகிராம் நோக்கி, 'மஹிந்திரா' நிறுவன தயாரிப்பான, 'தார்' ஜீப்பில் வந்தனர்.
டில்லி - குருகிராம் தேசிய நெடுஞ்சாலையில் ஜார்சா சவுக் பகுதியில் நேற்று அதிகாலை அதிவேகமாக வந்த ஜீப், சாலை தடுப்பில் திடீரென மோதியது.
இதில், ஜீப் முற்றிலுமாக நொறுங்கியது. அதில் பயணித்தோர், 100 மீட்டர் துாரத்துக்கு துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். இந்த விபத்தில் மூன்று பெண்கள், இரு ஆண்கள் என ஐந்து பேர் பலியாகினர்.
தகவல் அறிந்து மீட்புப்படையினருடன் வந்த போலீசார், பலியான ஐந்து பேர் சடலங்களையும் மீட்டனர்.
படுகாயத்துடன் போராடிய நபரை மீட்டு குருகிராம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'ஜீப்பில் வந்த ஆறு பேரும் நள்ளிரவு பார்ட்டியில் பங்கேற்றுவிட்டு அதிவேகமாக வந்தபோது விபத்தில் சிக்கியுள்ளனர். இறந்தவர்கள் உடல் அடையாளம் கா ணப் பட்டுள்ளன' என்றனர்.