பள்ளத்தாக்கில் போர்வெல் டிரக் கவிழ்ந்ததில் 5 பேர் பலி: சத்தீஸ்கரில் சோகம்
பள்ளத்தாக்கில் போர்வெல் டிரக் கவிழ்ந்ததில் 5 பேர் பலி: சத்தீஸ்கரில் சோகம்
ADDED : ஜூலை 11, 2025 09:30 PM

ராய்பூர்;சத்தீஸ்கரில் போர்வெல் டிரக் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
மத்திய பிரதேசத்தில் இருந்து போர்வெல் டிரக் ஒன்று சத்தீஸ்கர் மாநிலம், கபீர்தம் மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தது. இந்த லாரியில் தொழிலாளர்கள் பலர் இருந்தனர்.
சாட்டா என்ற கிராமம் அருகில் வளைவு ஒன்றில் திரும்பும் போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகில் உள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியில் இருந்தவர்களில் 5 பேர் பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் விபத்து நிகழ்ந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். சடலங்களை மீட்ட அவர்கள், படுகாயம் அடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்கள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.