ADDED : ஜூன் 13, 2025 02:34 AM

அகமதாபாத்: விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், ஆமதாபாதின் மெகானி நகரில் உள்ள பி.ஜே., மருத்துவக் கல்லுாரி விடுதி கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. மதிய நேரம் என்பதால் ஏராளமான மாணவர்கள், விடுதியில் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது விமானம் விழுந்து வெடித்து சிதறியதில், விடுதி கட்டடம் பெரும்
சேதமடைந்தது.
இடிபாடுகளில் சிக்கி ஐந்து மருத்துவ மாணவர்கள் உயிரிழந்தனர். இதில் நான்கு பேர் இளங்கலை மருத்துவ மாணவர்கள், ஒருவர் முதுகலை மருத்துவ மாணவர். படுகாயமடைந்த 40 மாணவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமானம் விழுந்த போது ஏற்பட்ட தீ விபத்து காரணமாக சில மாணவர்கள் தப்பிக்கும் நோக்குடன் ஜன்னல் வழியாக குதித்துள்ளனர்.
இதிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக அங்கிருந்த மாணவர் ஒருவரின் தாயார் தெரிவித்தார். மாணவர்களின் இறப்புக்கு, அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்துள்ளது.