உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஏப் 27, 2026 06:16 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி : யூனியன் பிரதேசமான லடாக்கில் மேலும் 2 மாவட்டங்களை உருவாக்க அதன் துணை நிலை கவர்னர் விகே சக்சேனா ஒப்புதல் அளித்து உள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, லடாக் தனியாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அங்கு லே மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் இருந்தன.
இந்நிலையில், நூப்ரா, ஷாம், சன்ஸ்கர், திராஸ், சங்தாம் ஆகிய 5 மாவட்டங்களை புதிதாக உருவாக்குவதற்கு துணை நிலை கவர்னர் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் லடாக்கில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது
