ADDED : அக் 12, 2024 02:02 AM

கவுஹாத்தி: அசாமில் போக்சோ குற்றவாளிகள் 5 பேர் சிறையிலிருந்து பெட்ஷீட், போர்வை, லூங்கி ஆகியவற்றை கயிறு போன்று திரித்து 20 அடி சுவரில் ஏறி குதித்து தப்பியோடிய சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஹேமந்த குமார் தாஸ் கூறியது, அசாமின் மோரேகான் மாவட்ட சிறையிலிருந்து சைபுதீன், ஜியரூல் இஸ்லாம், நூர்இஸ்லாம், மாபியதுல், அப்துல் ரஷீத் ஆகிய 5 பேரும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது விசாரணை நிலுவையில் உள்ளது.
மோரேகான் சிறையில் அடைக்கப்ட்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 1 மணியளவில் சிறையிலிருந்து வெளியேறி பெட்ஷீட், போர்வை, லுங்கி ஆகியவற்றை கயிறாக திரித்து 20 அடி சுவரில் ஏறி தப்பியோடினர்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய சிறைத்துறை டி,ஜி.பி., , ஜெயிலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். தப்பியோடிய 5 போக்சோ குற்றவாளிகளை தேடுதல் வேட்டையை போலீசார் துவக்கியுள்ளனர்.
மோரேகான் நகர போலீஸ் கமிஷனர் டி.சர்மா கூறியது, 5 போக்சோ குற்றவாளிளும் சோனித்பூர் மாவட்டம் தேஜ்பூரைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அங்கு போலீஸ் படை விரைந்துள்ளது என்றார்.
*************

