UPDATED : டிச 24, 2024 08:29 PM
ADDED : டிச 24, 2024 08:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீநகர்: காஷ்மீரில் 300 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ஹரோயோ பகுதியில் இந்த விபத்து நடந்தது. பனோய் என்ற இடத்திற்கு 18 வீரர்களுடன் சென்று கொண்டிருந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. தகவல் அறிந்த போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தில் ஐந்து ராணுவ வீரர்கள் உயிர் இழந்த நிலையில், 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.