உ.பி.யில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் உடல்சிதறி பலி
உ.பி.யில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து: 5 தொழிலாளர்கள் உடல்சிதறி பலி
ADDED : ஆக 31, 2026 05:57 PM

லக்னோ: உ.பி.யில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் உடல்சிதறி பலியாகினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:
கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள மனோரி பகுதியில் பட்டாசு தயாரிப்பு ஆலை உள்ளது. இங்கு எப்போதும் போல் 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசுகளை தயாரித்துக் கொண்டு இருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று உரசி பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது பணியில் இருந்த அனைவரும் சிக்கிக் கொண்டனர்.
இதில் ஆலை முற்றிலும் சேதம் அடைந்தது. வெடிச்சத்தத்தினால், பட்டாசு ஆலையின் அருகே இருந்த வீடுகளும் பலத்த சேதம் அடைந்தன. பட்டாசுகள் வெடித்தபோது ஏற்பட்ட சத்தம், 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு எதிரொலித்தது.
வெடி விபத்து பற்றிய தகவல் அறிந்த போலீசாரும், தீயணைப்பு மீட்பு துறையினரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 4 மணி நேரம் போராட்டத்திற்கு அவர்கள், 5 சடலங்களை கண்டெடுத்தனர்.
மற்றவர்களின் நிலைமை என்னானது என்பது பற்றிய எந்த தகவலும் இல்லை. அவர்களை மீட்புக் குழுவினர் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீஸ் ஐஜி, டிஐஜி உள்ளிட்ட உயரதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வெடி விபத்துக்கான காரணம் என்பது பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.
