தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ 5 வயது ஆண் குழந்தை நீரில் மூழ்கி பலி

 5 வயது ஆண் குழந்தை நீரில் மூழ்கி பலி

 5 வயது ஆண் குழந்தை நீரில் மூழ்கி பலி


ADDED : பிப் 24, 2026 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 11:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நொய்டா:சிப்பியானா பசுர்க் என்ற கிராமத்தை சேர்ந்த, 5 வயது ஆண் குழந்தையை காணாமல் அவரின் தந்தை இந்தர்பால் என்பவர், பிஸ்ராக் போலீசில் புகார் அளித்திருந்தார்.

போலீசார் விசாரித்து வந்த நிலையில், அந்த ஆண் குழந்தை, கோவில் அருகே உள்ள குட்டை ஒன்றில் பிணமாக மிதப் பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார், குழந்தை உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர் .

உத்தர பிரதேசத்தின் பருக்காபாத் என்ற இடத்தை பூர்வீகமாக கொண்ட அந்த குழந்தை, தன் பெற்றோருடன் சிப்பியானா புசுர்க் கிராமத்தில் வசித்து வந்தது. ஒரு வாரத்திற்கு முன், திடீரென மாயமான அந்த குழந்தை, நேற்று குட்டை ஒன்றிலிருந்து மீட்கப்பட்டது, அந்த கிராமத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாத துவக்கத்தில், இன்னொரு விபத்தாக, 3 வயது ஆண் குழந்தை, கிரேட்டர் நொய்டா பகுதியில் குட்டையில் தவறி விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us