250 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்!
250 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன்; மீட்பு பணி தீவிரம்!
ADDED : டிச 10, 2024 07:36 AM

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 250 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவனை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தில் நங்கல் கிராமத்தில் நேற்று (டிச.,09) மாலை 5 வயது சிறுவன் விளையாடி கொண்டிருந்தான். அருகில் 250 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு ஒன்று இருந்துள்ளது. இதில், 5 வயது சிறுவன் தவறி விழுந்தான். பதறி போன பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் மீட்க முயற்சி செய்தனர். பின்னர் மீட்பு படை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
நேற்றிரவு முதல் தற்போது வரை 5 வயது சிறுவனை மீட்கும் முயற்சியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிறுவன் தற்போது 150 அடி ஆழத்தில் இருக்கிறான். சிறுவன் உடல்நிலை சீராக உள்ளது. சிறுவனுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது.
தேசிய, மாநில மீட்பு படையினர் மீட்பதற்கு நீண்ட நேரம் போராடி கொண்டு இருக்கிறார்கள். ஜே.சி.பி மூலம் அருகில் குழி தோண்டும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

