ம.பி.,யில் குழந்தையை சீரழித்த போதை ஆசாமி: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
ம.பி.,யில் குழந்தையை சீரழித்த போதை ஆசாமி: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
UPDATED : பிப் 27, 2025 10:25 PM
ADDED : பிப் 27, 2025 10:23 PM

போபால்: ம.பி.,யில் 5 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த போதை ஆசாமி, கொடூரமாகவும் தாக்கி உள்ளான். இதனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தையை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர்.
ம.பி., மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் உள்ள ஷிவபுரி பகுதியில் 5 வயது குழந்தை கடந்த 23ம் தேதி காணாமல் போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் வீட்டின் அருகே, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக பக்கத்து வீட்டில் வசிக்கும் 17 வயதான நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அவன் மதுபோதையில் குழந்தையை கடத்தி வந்து, பாலியல் ரீதியில் தாக்குதல் நடத்தியதுடன், தலையை பல முறை சுவற்றில் மோதச் செய்துள்ளான். பிறகு கொடூரமாக தாக்கி உள்ளான். அதில், குழந்தையின் தலை மட்டும் அல்லாமல் உடல் மற்றும் பிறப்புறுப்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, குழந்தையின் பிறப்புறுப்பில் மட்டும் டாக்டர்கள் 28 தையல் போட்டு உள்ளனர்.
குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, குழந்தை பிழைக்கும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இல்லை என டாக்டர்கள் தெரிவித்தனர். பல மணி நேரம் அறுவை சிகிச்சை செய்த போதும், குழந்தையின் உடல்நிலை இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இதனையறிந்த அப்பகுதி வாசிகள் போராட்டத்தில் குதித்தனர். குற்றவாளியை தூக்கில் போட வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.