ம.பி.,யில் ஆள் இல்லாத காரில் 52 கிலோ தங்கம் பறிமுதல்
ம.பி.,யில் ஆள் இல்லாத காரில் 52 கிலோ தங்கம் பறிமுதல்
ADDED : டிச 21, 2024 12:51 AM
போபால்: மத்திய பிரதேச தலைநகர் போபால் புறநகரில் உள்ள மெண்டோரி வனப்பகுதி வழியாக தங்கம் கடத்தப்படுவதாக வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த வனப்பகுதியை, 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சுற்றி வளைத்தனர்.
அப்போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 'இன்னோவா' காரில் போலீசார் சோதனை செய்தனர். காரில் யாரும் நிலையில், இரு பைகள் மட்டுமே இருந்தன.
அவற்றில், 40 கோடி ரூபாய் மதிப்புள்ள 52 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் 10 கோடி ரூபாய் ரொக்கம் இருந்தன.
இவற்றை பறிமுதல் செய்து விசாரித்த போலீசார், கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த கார், குவாலியர் பகுதியைச் சேர்ந்த சேத்தன் கவுர் என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர்.
இவர், பிராந்திய போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றிய சவுரப் ஷர்மாவின் கூட்டாளி.
ஏற்கனவே பல வழக்குகளில் சவுரப் சர்மா உள்ளிட்ட கட்டுமான நிறுவனத்தினர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள், அவர்களுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.

