sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மாநிலத்தில் சைபர் குற்றங்கள் வாயிலாக 4 மாதங்களில் ரூ.520 கோடி அம்போ!ஏமாந்தோர் பட்டியலில் படித்தவர்கள், உயர் பதவியாளர்கள்

/

மாநிலத்தில் சைபர் குற்றங்கள் வாயிலாக 4 மாதங்களில் ரூ.520 கோடி அம்போ!ஏமாந்தோர் பட்டியலில் படித்தவர்கள், உயர் பதவியாளர்கள்

மாநிலத்தில் சைபர் குற்றங்கள் வாயிலாக 4 மாதங்களில் ரூ.520 கோடி அம்போ!ஏமாந்தோர் பட்டியலில் படித்தவர்கள், உயர் பதவியாளர்கள்

மாநிலத்தில் சைபர் குற்றங்கள் வாயிலாக 4 மாதங்களில் ரூ.520 கோடி அம்போ!ஏமாந்தோர் பட்டியலில் படித்தவர்கள், உயர் பதவியாளர்கள்


ADDED : ஜூன் 02, 2024 05:53 AM

Google News

ADDED : ஜூன் 02, 2024 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: கர்நாடக தலைநகரான பெங்களூரில், கடந்த நான்கு மாதங்களில் மட்டும், 5,960 சைபர் குற்றங்கள் மூலம், 520 கோடி ரூபாயை பொதுமக்கள் பறிகொடுத்துள்ளனர். இதில், ஓய்வுபெற்ற போலீசார், மென் பொறியாளர்கள் உள்ளிட்ட படித்தவர்களும், உயர் பதவியில் இருப்பவர்களும் அடங்குவர்.

தொழில்நுட்ப வளர்ச்சி மென்மேலும் பல பரிணாமங்கள் கண்டு வருகிறது. ஆனால், அதே பரிணாமத்தை பயன்படுத்தி, ஏமாற்றுவோரும் அதிகரித்து வருகின்றனர்.

சைபர் குற்றங்களில் போலீசார் பல வழக்குகளை துப்புத்துலக்கி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், எந்த பிரயோஜனமும் இல்லை.

பெங்களூரு நகர போலீசாரின் தரவுப்படி, நடப்பாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் இறுதி வரை, 5,960 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இதன் மூலம், 520 கோடி ரூபாய்க்கு மேல் ஏமாந்துள்ளனர். இந்த தொகை, நடப்பாண்டு இறுதிக்குள் இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது.

வலைதளங்களில் வலை


'வேலை வாய்ப்பு இருப்பதாக யு டியூப், கூகுள் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஒரு லிங்கை கிளிக் செய்தால், சம்பந்தப்பட்ட வேலை அளிக்கும் நிறுவனத்தின் இணையதளம் திறக்கும்.

'நீங்கள் அதில் உங்கள் தகவல்களை பதிவிட்டு, பணியாற்றலாம். வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் சம்பாதிக்கலாம்' என, வலை விரிக்கப்பட்டிருக்கும்.

அல்லது முதலீடு செய்தால் இரட்டிப்பு வருவாய் பெறலாம் என்ற விளம்பரம் தென்படும்.

விபரம் தெரியாதவர்கள் என்றால் கூட பரவாயில்லை, விளம்பரம் தெரிந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, போலீசார், வழக்கறிஞர்கள், மென்பொருள் ஊழியர், இல்லத்தரசிகள், மாணவர்கள் என, அனைத்துத் தரப்பினரும் இந்த மோசடியில் சிக்கி, தாங்கள் சேமித்து வைத்திருந்த பணம் அனைத்தையும் ஒரே நாளில் இழந்திருக்கின்றனர்.

கூரியர் மோசடி


'பெட் எக்ஸ் கூரியர்' என்ற பெயரில் தான், பண இழப்பு அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக, 278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

தெரியாத எண்ணில் இருந்து மொபைல் போனில் தொடர்பு கொள்பவர்கள், 'உங்கள் பெயரில் வெளிநாட்டில் கூரியர் புக் செய்யப்பட்டு உள்ளது. அதில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. உங்களை எந்த நேரத்திலும் கைது செய்யலாம்' என மிரட்டி பணம் பறித்துள்ளனர்.

'உங்கள் ஆதார் அட்டை மூலம் வாங்கப்பட்ட சிம்களை, பயங்கரவாதிகள் பயன்படுத்துகின்றனர்; உங்கள் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சில மணி நேரத்தில் கைது செய்துவிடுவோம்' என்றும் மர்ம நபர்கள் மிரட்டியுள்ளனர்.

'நாங்கள் மும்பை சைபர் போலீசார். உங்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. உங்களை கைது செய்ய வருகிறோம்' என்று கூறி மிரட்டியுள்ளனர். அச்சமடைந்தவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணத்தை 'ஆட்டை'யப் போட்டுள்ளனர்.

'கோல்டன் ஹவர்'


இதுபோன்று சமூக வலைதளம், இணையதளம் மூலம் ஏமாந்தவர்கள், உடனடியாக '1903' உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். தங்களின் 172 கோடி ரூபாய் இழந்ததாக புகார் அளித்தனர்.

உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், ஏமாந்தவர்களின் வங்கிக் கணக்கை முடக்கினர்.

இதனால், அவர்கள் வங்கிக்கணக்கில் இருந்து தொடர்ந்து குற்றவாளிகள் பணம் எடுக்க முடியாமல் போனது.

ஏமாந்தது தொடர்பாக உடனடியாக தகவல் தெரிவித்தால், தொடர்ந்து பணம் பறிபோவது தவிர்க்கப்படும். இதை 'கோல்டன் ஹவர்' என போலீசார் அழைக்கின்றனர்.

ஏமாந்தவர்களின் பட்டியலில், ஓய்வுபெற்ற போலீசார், மென் பொறியாளர்கள் உள்ளிட்ட படித்தவர்களும், உயர் பதவியில் இருப்பவர்களும் அடங்குவர்.

சைபர் குற்றங்கள் தொடர்பாக 5,960 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 520 கோடியே 28 லட்சத்து 15,623 ரூபாய் மோசடி செய்யப்பட்டுஉள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 172 கோடியே 36 லட்சத்து 56,897 ரூபாய் 'பிரீஸ்' செய்யப்பட்டு உள்ளது. 32 கோடியே நான்கு லட்சத்து 58 ஆயிரத்து 722 ரூபாய், இழந்தவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

இரட்டிப்பு லாபம் பெற வேண்டும் என்ற நோக்கில், தெரியாத நபர்களிடம், நிதி ஒப்பந்தம், இடைத்தரகர்களின் ஆசை வார்த்தைக்கு அடிபணியக்கூடாது. பல வகையான மோசடிகள் உள்ளன. மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மோசடி நடந்தால், உடனடியாக உதவி எண்களில் புகார் அளிக்க வேண்டும். அத்தகைய சந்தர்ப்பத்தில், பணத்தை திருப்பி தருவதற்கு போலீஸ் துறை உதவும்.

பி.தயானந்தா, நகர போலீஸ் கமிஷனர், பெங்களூரு.






      Dinamalar
      Follow us