உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 14, 2026 04:17 PM
ADDED : அக் 14, 2026 04:14 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி: வடகிழக்கு டில்லியில் வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த, 560 கிலோ பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வடகிழக்கு டில்லியில் சட்டவிரோதமாக பட்டாசு விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. மண்டோலியில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஒரு வீட்டின் முதல் தளத்தில், அட்டைப் பெட்டிகள் மற்றும் சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த, 560 கிலோ பட்டாசுகள் மற்றும் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்களை பறிமுதல் செய்தனர். பட்டாசு தயாரித்த முஹமது தயூப்,23, என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
