5.60 லட்சம் பேர் பார்வையிட்ட லால்பாக் மலர் கண்காட்சி
5.60 லட்சம் பேர் பார்வையிட்ட லால்பாக் மலர் கண்காட்சி
ADDED : ஜன 29, 2024 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: லால்பாக் மலர் கண்காட்சியை பார்வையிட 5.60 லட்சம் பேர், வருகை தந்து உள்ளனர். இதன்மூலம் தோட்டக்கலைத்துறைக்கு 2.60 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
ஆண்டுதோறும் குடியரசு, சுதந்திர தினத்தை ஒட்டி, பெங்களூரு லால்பாக்கில் தோட்டக்கலைத்துறை சார்பில், மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு குடியரசு தினத்தை ஒட்டி 18ம் தேதி கண்காட்சி துவங்கியது.
மொத்தம் 11 நாட்கள் நடந்த, கண்காட்சியை 5.60 லட்சம் பேர் பார்வையிட்டனர். இதன்மூலம் தோட்டக்கலைத்துறைக்கு 2.60 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
“லால்பாக் மலர் கண்காட்சி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. எந்த புகாரும் வரவில்லை. கண்காட்சிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும், நன்றி,” என, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் குஸ்மா தெரிவித்துஉள்ளார்.