sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மஹா.வில் ஆட்டோ - பஸ் மோதி விபத்து; பள்ளி மாணவி உள்பட 6 பேர் உயிரிழப்பு

/

மஹா.வில் ஆட்டோ - பஸ் மோதி விபத்து; பள்ளி மாணவி உள்பட 6 பேர் உயிரிழப்பு

மஹா.வில் ஆட்டோ - பஸ் மோதி விபத்து; பள்ளி மாணவி உள்பட 6 பேர் உயிரிழப்பு

மஹா.வில் ஆட்டோ - பஸ் மோதி விபத்து; பள்ளி மாணவி உள்பட 6 பேர் உயிரிழப்பு


ADDED : பிப் 18, 2026 05:33 PM

Google News

ADDED : பிப் 18, 2026 05:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அமராவதி: மஹாராஷ்டிராவில் ஆட்டோ - பஸ் மோதிக் கொண்ட விபத்தில் பள்ளி மாணவி உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

அமராவதி மாவட்டத்தில் ரஜூரா பஜார் பகுதியில் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்புறம் ஆட்டோ ஒன்றும் வந்து கொண்டு இருந்தது. இவ்விரண்டு வாகனங்களும் எதிர்பாராத விதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த 10ம் வகுப்பு மாணவி உள்பட 6 பேரும் உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்தை அறிந்த உள்ளூர் மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். பின்னர் தாங்களாகவே மீட்பு பணிகளில் இறங்கி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், சம்பவ பகுதிக்குச் சென்று பஸ் டிரைவரிடம் முதல்கட்டமாக விசாரணை நடத்தினர். முழு விசாரணைக்கு பின்னரே விபத்துக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us