சத்தீஸ்கரில் கார் மீது லாரி மோதி விபத்து; 6 பேர் பரிதாப பலி; 7 பேர் படுகாயம்
சத்தீஸ்கரில் கார் மீது லாரி மோதி விபத்து; 6 பேர் பரிதாப பலி; 7 பேர் படுகாயம்
ADDED : டிச 16, 2024 10:18 AM

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டதில், 6 பேர் உயிரிழந்தனர். 7 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பாலோட் மாவட்டத்தில், கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 7 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: காரில் 13 பேர், குடும்ப விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தனர். பாலோட் மாவட்டத்தில் கார் வரும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் இருந்த 13 பேரில், ஆறு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.