உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 23, 2026 05:07 AM

அ நிறம் | அளவு
கஞ்சம்: ஒடிஷாவில் கஞ்சம் மாவட்டத்தின் எரேந்திரா பகுதியைச் சேர்ந்த 10 பேர், அதே மாவட்டத்தில் உள்ள சிங்கசனி கோவிலுக்கு ஆட்டோவில் நேற்று சென்றனர்.
அப்போது, பெர்ஹாம்பூரில் இருந்து புருஷோத்தம்பூர் நோக்கி வந்த பஸ், ஆட்டோ மீது வேகமாக மோதியது. இதி ல், சில மீட்டர் துாரம் ஆட்டோ இழுத்துச் செல்லப்பட்டது.
இதில், சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் மேலும் மூன்று பேர் உயிரிழந்தனர். விபத்தில், இரண்டு சிறுமியர் உட்பட மொத்தம் ஆறு பேர் உயிரிழந்தனர்.
நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
விபத்து நடந்த பகுதியில் இருந்த பஸ் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
