உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : நவ 19, 2026 08:23 PM
அ நிறம் | அளவு
அராரியா: பீஹார் மாநிலம், சுபால் மாவட்டம் துமா கிராமத்தை சேர்ந்த மணமகள் வீட்டார் ஏழுபேர் அராரியா மாவட்டம், பப்தியா கிராமத்தில் உள்ள மணமகன் வீட்டுக்கு சென்றனர். அங்கு திருமணத்துக்கு முந்தைய'திலக்' என்ற சடங்கில் பங்கேற்ற அவர்கள் நேற்று (நவ.,18) இரவு காரில் ஊர் திரும்பினர்.
தாராபாரி அருகே ஒரு பாலத்தில் வந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கால்வாயில் தவறி விழுந்தது. இதில், காரில் சிக்கிய ஏழு பேரையும் போலீசார் மீட்டு அராரியா சதார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் ஆறு பேர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, ஆறு பேரின் உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
