sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அதிகாலை பயணத்தால் விபரீதம்; உபியில் டபுள் டக்கர் பஸ் மீது வேன் மோதி 6 பேர் பலி

/

அதிகாலை பயணத்தால் விபரீதம்; உபியில் டபுள் டக்கர் பஸ் மீது வேன் மோதி 6 பேர் பலி

அதிகாலை பயணத்தால் விபரீதம்; உபியில் டபுள் டக்கர் பஸ் மீது வேன் மோதி 6 பேர் பலி

அதிகாலை பயணத்தால் விபரீதம்; உபியில் டபுள் டக்கர் பஸ் மீது வேன் மோதி 6 பேர் பலி


ADDED : மார் 03, 2026 10:31 AM

Google News

ADDED : மார் 03, 2026 10:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் டபுள் டக்கர் ஸ்லீப்பர் பஸ் வேன் மீது மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் டில்லியின் பிரேம் நகரில் இருந்து ராஜஸ்தானின் தோல்பூருக்கு 13 பயணிகளுடன் சென்ற வேன், நொய்டாவிலிருந்து கோரக்பூருக்குச் சென்ற டபுள் டக்கர் ஸ்லீப்பர் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அதிகாலை 4.20 மணியளவில் நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது.

வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.






      Dinamalar
      Follow us