ADDED : மார் 04, 2026 03:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹத்ராஸ்: தலைநகர் டில்லியில் உள்ள பிரேம் நகர் பகுதியில் இருந்து ராஜஸ்தானின் டோல்பூருக்கு, 13 பயணியரை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று நேற்று அதிகாலை சென்றது.
உ.பி.,யின் ஹத்ராஸ் மாவட்டம், சதாபாத் அருகே யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் சென்றபோது, நொய்டாவில் இருந்து கோராக்பூருக்கு சென்று கொண்டிருந்த படுக்கை வசதி கொண்ட மாடி பஸ், திடீரென வேன் மீது மோதியது.
இதில், வேனில் மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்; மூன்று குழந்தைகள், இரு ஆண்கள், ஒரு பெண் ஆகிய ஆறு பேர் காயம்அடைந்தனர்.
வேன் டிரைவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

