ADDED : டிச 09, 2024 12:29 AM

சபரிமலை : சபரிமலையில் நடப்பு சீசனில் இதுவரை 6 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூறுகிறது.
சபரிமலை வரும் பக்தர்களுக்காக நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய மூன்று இடங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மாளிகைப்புறம் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள பிரமாண்ட அன்னதான மண்டபத்தில் 24 மணி நேரமும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. காலையில் ரவா உப்புமா, கடலைக்கறி, மதியம் புலாவ், இரவு கஞ்சி ஊறுகாய் வழங்கப்படுகிறது.
இதுவரை சன்னிதானத்தில் 4 லட்சத்து 5 ஆயிரம் பேரும், பம்பையில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேரும், நிலக்கல்லில் 39 ஆயிரம் பேரும் பயன் பெற்றுள்ளனர். உணவு தயாரித்தல் விநியோகம், பாத்திரங்கள் பராமரித்தல் இயந்திர மயமாக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுக்கு, முன்னுரிமை கொடுத்து உணவு வழங்கப்படுவதாக அன்னதானம் தனி அதிகாரி திலீப் குமார் கூறினார்.