ADDED : பிப் 06, 2025 12:46 AM

தண்டேவாடா:சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள தெற்கு பஸ்தர் பகுதியில் செயல்பட்டு வந்த மலங்கர் பகுதி மாவோயிஸ்ட் குழுவினர் நேற்று போலீசார் மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் முன் சரண் அடைந்தனர்.
ஐந்து பெண்கள் உட்பட ஆறு நக்சல்கள், 'வீடு திரும்புவோம்' என்ற நக்சல் புணரமைப்பு திட்டத்தின் கீழ் நேற்று சரணடைந்தனர்.
மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:
பர்காம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் துணை தளபதி ஹரேந்திர குமார் மாத்வி மற்றும் தன்டகாரன்யா ஆதிவாசி கிஷான் மஸ்துார் சங்கத்தின் துணை தலைவரான ஹிட்மி மார்கம் என்ற பெண் ஆகியோரும் சரண் அடைந்தனர்.
இது தவிர சரண் அடைந்த ஆயதே முசாகி, ஜிம்மி கோரம், ஹூங்கி சோடி, மற்றும் சோடி ஆகிய நான்கு பெண்களும் கீழ் மட்ட நக்சல்களாக செயல்பட்டவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.