sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சொத்து குவிப்பு புகாரில் 6 அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில்... 'ரெய்டு!'; லோக் ஆயுக்தா சோதனையில் சிக்கிய தங்கம், வெள்ளி நகைகள்

/

சொத்து குவிப்பு புகாரில் 6 அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில்... 'ரெய்டு!'; லோக் ஆயுக்தா சோதனையில் சிக்கிய தங்கம், வெள்ளி நகைகள்

சொத்து குவிப்பு புகாரில் 6 அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில்... 'ரெய்டு!'; லோக் ஆயுக்தா சோதனையில் சிக்கிய தங்கம், வெள்ளி நகைகள்

சொத்து குவிப்பு புகாரில் 6 அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில்... 'ரெய்டு!'; லோக் ஆயுக்தா சோதனையில் சிக்கிய தங்கம், வெள்ளி நகைகள்


ADDED : ஜன 10, 2024 12:11 AM

Google News

ADDED : ஜன 10, 2024 12:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : சொத்துக் குவிப்பு புகாரில் ஆறு அரசு அதிகாரிகள் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட 30 இடங்களில், லோக் ஆயுக்தா போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தங்கம், வெள்ளி நகைகள், பணம், வெளிநாட்டு மதுபாட்டில்கள் சிக்கின.

கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும், அரசு அதிகாரிகள் வீடு, அலுவலங்களில், லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி, தங்கம், வெள்ளி நகைகள், பணம், சொத்து ஆவணங்கள், வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

ஒருபக்கம் லோக் ஆயுக்தா சோதனை நடந்தாலும், இன்னொரு பக்கம் எதற்கும் அஞ்சாத அரசு அதிகாரிகள், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆறு அதிகாரிகள் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடுகளில் நேற்று லோக் ஆயுக்தா சோதனை நடந்தது. அது பற்றிய விபரம்:

பெஸ்காம்


பெங்களூரு பெஸ்காம் தலைமை பொது மேலாளர் நாகராஜ், பெங்களூரு ரூரல் குந்தனா கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி பத்மநாபா, கர்நாடகா ரூரல் உள்கட்டமைப்பு வளர்ச்சிக் கழக நிர்வாக செயற்பொறியாளர் சையது முனீர்...

பொதுப்பணித்துறை இன்ஜினியர் சதீஷ், சென்னஹள்ளி கிராம பஞ்சாயத்து அதிகாரி சுரேஷ், ராம்நகர் நகர மற்றும் திட்ட வளர்ச்சி துறை இணை செயலர் மஞ்சேஷ்.

இவர்கள் ஆறு பேரும், தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, லோக் ஆயுக்தா ஐ.ஜி., சுப்பிரமணீஸ்வரர் ராவுக்கு புகார்கள் சென்றன. இதனால், ஆறு பேரின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்த, லோக் ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதன்படி, நேற்று காலை 6:00 மணி முதல் ஆறு அதிகாரிகளுக்கு சொந்தமான வீடு, பண்ணை வீடுகள், வணிக கட்டடங்கள், உறவினர்கள் வீடுகள், அவர்களின் அலுவலகங்கள் என, பெங்களூரு, ராம்நகர், மாண்டியா, பல்லாரி உள்ளிட்ட மாவட்டங்களில், 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

பெங்களூரில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் 85 லோக் ஆயுக்தா போலீசார் ஈடுபட்டனர்.

புலி நகங்கள்


அனைத்து இடங்களிலும் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பெஸ்காம் தலைமை பொது மேலாளர் நாகராஜ், ஒன்பது வீட்டுமனைகள், மூன்று வீடுகள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதவிர, அவர் வீட்டில், இரண்டு புலி நகங்களும் சிக்கியது. மற்ற ஐந்து அதிகாரிகளும் வீட்டுமனை, வீடுகள், பெட்ரோல் நிலையங்கள் நடத்தியது கண்டறியப்பட்டது.

இதுதவிர, ஆறு பேரின் வீடுகளில் இருந்தும் தங்கம், வெள்ளி நகைகள், கட்டு, கட்டாக பணம் சிக்கின. இரண்டு அதிகாரிகள் வீட்டில் வெளிநாட்டு மதுபானங்கள் சிக்கின. இதை லோக் ஆயுக்தா போலீசார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.

புலி நகங்கள் சிக்கியது குறித்து, வனத்துறையினருக்கு, லோக் ஆயுக்தா போலீசார் தகவல் அளித்தனர். இதனால்வனத்துறையினரும் நேற்று, நாகராஜ் வீட்டில் சோதனை நடத்தி, அவரிடம் விசாரித்தனர்.

ரூ.7 லட்சம் லஞ்சம்


சில மாதங்களுக்கு முன்பு, ஒரு கட்டடத்திற்கு மின் இணைப்பு கொடுக்க, 7 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில், நாகராஜ் கைது செய்யப்பட்டு இருந்தார். இதனால், அவர் வீட்டில் சோதனை நடந்திருப்பது தெரியவந்து உள்ளது.

இந்த ஆறு அதிகாரிகளுக்கும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப, லோக் ஆயுக்தா போலீசார் தயாராகி வருகின்றனர்.

ஒரே நாளில் ஆறு அதிகாரிகள் வீடுகளில், லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தி இருப்பது, சக அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின்படி, இன்னும் சில அரசு அதிகாரிகள் வீடுகளில் வரும் நாட்களில் சோதனை நடக்கலாம் என்றும் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us