தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ லாரி - பஸ் மோதல்: 6 பயணியர் பலி

லாரி - பஸ் மோதல்: 6 பயணியர் பலி

லாரி - பஸ் மோதல்: 6 பயணியர் பலி


UPDATED : ஜூன் 17, 2026 07:12 PM

ADDED : ஜூன் 17, 2026 05:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 17, 2026 07:12 PM ADDED : ஜூன் 17, 2026 05:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வதோதரா:குஜராத்தில், நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது அதிவேகமாக வந்த தனியார் பஸ் மோதியதில், பஸ்சில் பயணித்த ஆறு பயணியர் உயிரிழந்தனர்.

ராஜஸ்தானில் இருந்து குஜராத்தின் சூரத் நோக்கி தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. 25க்கும் மேற்பட்டோர் பயணித்த அந்த பஸ் வதோதரா - ஹலோல் நெடுஞ்சாலையில் உள்ள கொடாம்பி கிராமம் அருகே அதிகாலை 4:00 மணிக்கு சென்றது.

அப்போது, சாலையில் நின்றிருந்த லாரியின் பின்னால் அந்த பஸ் அதிவேகமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி முற்றிலுமாக நொறுங்கியது.

இந்த விபத்தில், பஸ்சில் இருந்த ஆறு பயணியர் உயிரிழந்தனர்; 20 பேர் காயமடைந்தனர். போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us