ADDED : பிப் 06, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய தலைநகரில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் 60.42 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
டில்லியின் 70 தொகுதிகளுக்கும் சட்டசபைத் தேர்தல் நேற்று முன்தினம் ஒரே கட்டமாக நடந்தது. மொத்தம் 1.55 கோடி பேர் ஓட்டுப்போட தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் ஆண்கள், 83.49 லட்சம். பெண்கள் 71.74 லட்சம். இளைஞர்கள் 25.89 லட்சம். முதல்முறை வாக்காளர்கள் 2.08 லட்சம்.
மொத்தம் 2,697 இடங்களில் 13,033 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேசிய தலைநகரில் உள்ள 70 தொகுதிகளை உள்ளடக்கிய 11 மாவட்டங்களிலும் 60.42 சதவீத ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மாவட்டம் வாரியாக பதிவான ஓட்டு விபரம் வருமாறு:
- நமது நிருபர் -

