அரசின் ஒப்பந்தம் பெற லஞ்சம் கொடுத்த 66 சதவீத தொழிலதிபர்கள்: கருத்துக்கணிப்பில் அம்பலம்
அரசின் ஒப்பந்தம் பெற லஞ்சம் கொடுத்த 66 சதவீத தொழிலதிபர்கள்: கருத்துக்கணிப்பில் அம்பலம்
ADDED : டிச 08, 2024 05:57 PM

புதுடில்லி: இந்தியாவில் உள்ள 66 சதவீத தொழிலதிபர்கள், அரசின் சேவையை பெற லஞ்சம் கொடுத்து உள்ளதாக கூறியுள்ளன.
இது தொடர்பாக 'ஆன்லைன் சர்க்கிள்' என்ற அமைப்பு லஞ்சம் தொடர்பாக மே 22 முதல் நவ.,30 வரை ஆன்லைன் வாயிலாக சர்வே ஒன்றை நடத்தியது.
இதில், கடந்த ஓராண்டில் இந்தியா முழுவதும் 159 மாவட்டங்களில் 66 சதவீத தொழிலதிபர்கள் அரசின் பணிகளை பெறுவதற்கு லஞ்சம் கொடுத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர். அரசு பணிகளுக்கு தேவையான பொருட்களை விநியோகம், ஒப்பந்தம் பெறுவது, உத்தரவை பெறுதல், பணிகளுக்கான பணத்தை பெற லஞ்சம் கொடுத்து உள்ளனர்.
லஞ்சப்பணத்தில் 75 சதவீதம், சட்டம், உணவு, மருந்து, சுகாதாரம், மெட்ராலஜி ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது என அந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் ஆய்வில் பங்கேற்ற 18 ஆயிரம் பேரில் 54 சதவீதம் பேர், லஞ்சம் கொடுக்க நாங்கள் நிர்பந்திக்கப்பட்டோம் எனவும், 46 சதவீதம் பேர், அதிகாரிகள் நடவடிக்கையை வேகமாக செய்ய வேண்டும் என்பதற்காக விருப்பப்பட்டு லஞ்சம் கொடுத்தோம் எனக்கூறியுள்ளனர்.