நான்கு கட்ட தேர்தல்களில் 67 சதவீத வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்
நான்கு கட்ட தேர்தல்களில் 67 சதவீத வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்
ADDED : மே 16, 2024 07:54 PM

புதுடில்லி: நடந்து முடிந்துள்ள நான்கு கட்ட லோக்சபா தேர்தல்களில் 66.95 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக கடந்த ஏப்.19ம் தேதி 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப். 26-ம் தேதி 13 மாநிலங்களில் 88 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக மே.07-ம் தேதி 12 மாநிலங்களில் 94 தொகுதிகளுக்கும், நான்காம் கட்டமாக மே.13-ம் தேதி 10 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இத்தேர்தலில் 45.01 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதுவரை நடந்த நான்கு கட்ட தேர்தல்களில் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
மீதமுள்ள மூன்று கட்ட ஓட்டுப்பதிவு வரும் மே.20, மே.25 மற்றும் ஜூன்.01-ம் தேதிகளில் நடக்கிறது. ஜூன்.04-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.