sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கர்நாடகாவில் நடந்த 2ம் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு 69 சதவீதம்! குடும்பம், குடும்பமாக வந்து வாக்காளர்கள் உற்சாகம்

/

கர்நாடகாவில் நடந்த 2ம் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு 69 சதவீதம்! குடும்பம், குடும்பமாக வந்து வாக்காளர்கள் உற்சாகம்

கர்நாடகாவில் நடந்த 2ம் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு 69 சதவீதம்! குடும்பம், குடும்பமாக வந்து வாக்காளர்கள் உற்சாகம்

கர்நாடகாவில் நடந்த 2ம் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு 69 சதவீதம்! குடும்பம், குடும்பமாக வந்து வாக்காளர்கள் உற்சாகம்


UPDATED : மே 08, 2024 05:47 AM

ADDED : மே 08, 2024 05:09 AM

Google News

UPDATED : மே 08, 2024 05:47 AM ADDED : மே 08, 2024 05:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு, : கர்நாடகாவில் நேற்று 14 தொகுதிகளில், இரண்டாவது கட்ட லோக்சபா தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 2019 தேர்தலில் பதிவான 68.66 சதவீத ஒட்டுகளே, இம்முறையும் பதிவானது. அதாவது, இம்முறை நேற்றிரவு நிலவரப்படி, 70.03 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. வாக்காளர்கள் குடும்பம், குடும்பமாக வந்து ஓட்டு போட்டனர். கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்ரல் 26, மே 7 என இரண்டு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதன்படி, முதல் கட்டமாக, உடுப்பி - சிக்கமகளூரு, ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா - தனி, துமகூரு, மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர் - தனி, பெங்களூரு ரூரல், பெங்., வடக்கு, பெங்., மத்திய, பெங்., தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார் - தனி ஆகிய 14 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது. இதில், 69.56 ஓட்டுகள் பதிவாகி இருந்தன.

2.59 கோடி வாக்காளர்கள்


இரண்டாம் கட்டமாக, சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா - தனி, கலபுரகி - தனி, ராய்ச்சூர் - எஸ்.டி., பீதர், கொப்பால், பல்லாரி - எஸ்.டி., ஹாவேரி, தார்வாட், உத்தர கன்னடா, தாவணகெரே, ஷிவமொகா ஆகிய 14 தொகுதிகளுக்கு, நேற்று ஓட்டுப்பதிவு நடந்தது. 227 வேட்பாளர்கள் இறுதி களத்தில் இருந்தனர்.

மொத்தம், 14 தொகுதிகளில், 2.59 கோடி வாக்காளர்கள் ஓட்டளிப்பதற்காக, 28,257 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்தது.

முன்பதிவு செய்த மாற்றுத் திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோர், ஓட்டுச்சாவடிக்கு வந்து செல்ல, இலவச வாகன வசதி செய்யப்பட்டது. நேற்று காலை 7:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, ஓட்டுப்பதிவு நடந்தது. ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன்னதாக, அரசியல் கட்சியினரின் ஏஜன்ட்கள் முன்னிலையில், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், தேர்தல் அதிகாரிகள் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தினர். மொத்தம் 50 ஓட்டுகள் பதிவு செய்தனர்.

வரிசையில் காத்திருப்பு


ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியாக இருப்பது உறுதி செய்யப்பட்டதும், காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவக்கப்பட்டது. சில இடங்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை. அவற்றை பழுது பார்த்து துவங்குவதற்கு தாமதமானது.

காலை 7:00 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று ஓட்டு போட்டனர். இளைஞர்கள், மகளிர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வந்தனர். பல பகுதிகளில், குடும்பம், குடும்பமாக ஓட்டுச்சாவடிகளுக்கு படையெடுத்து, தங்களுடைய ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்றினர்.

வேட்பாளர்களும், முக்கிய பிரமுகர்களும் காலையிலேயே குடும்பத்தினருடன் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர். வெயிலின் காரணமாக, 11:00 மணிக்கு மேல் ஓட்டுப்பதிவு மந்தமாக இருந்தது. ஆனால், மதியம் 3:00 மணிக்கு பின், மீண்டும் சூடுபிடித்தது.

இளைஞர்கள் ஆர்வம்


முதல் முறை வாக்காளர்கள், இளைஞர்கள் ஓட்டளிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று ஓட்டுப்பதிவு செய்தனர். ஓட்டு போட்ட பின், 'செல்பி பாயின்ட்' முன் நின்று படம் எடுத்து மகிழ்ந்தனர். சமூக வலைதளங்களில் அந்த படங்களை பதிவு செய்து, 'நாங்கள் எங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டோம், நீங்கள் எப்போது செய்வீர்கள்' என்று கேள்வி எழுப்பினர்.

அரசியல் கட்சி தொண்டர்கள் துண்டுகள் அணிவதில் ஆங்காங்கே சில சலசலப்புகள் நடந்தன. பா.ஜ., காங்கிரஸ் தொண்டர்களிடையே சில இடங்களில் வாக்குவாதம் நடந்தது. சில இடங்களில் 6:00 மணியை தாண்டி, வரிசையில் நின்றவர்களுக்கு மட்டும் ஓட்டு போட அனுமதி அளிக்கப்பட்டது. மற்றபடி 14 தொகுதிகளிலும் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது.

ஷிவமொகாவில் அதிகம்


சில இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருந்த பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. இதை கவனித்த வாக்காளர்கள், கடந்த முறை ஓட்டுப்பதிவு செய்தோம். இம்முறை எப்படி நீக்கினீர்கள் என்று அதிகாரிகளை வறுத்தெடுத்தனர்.

நேற்று காலை 9:00 மணிக்கு, 9.45 சதவீதம்; 11:00 மணிக்கு, 24.48 சதவீதம்; 1:00 மணிக்கு, 41.59 சதவீதம்; 3:00 மணிக்கு, 54.20 சதவீதம்; 5:00 மணிக்கு, 66.05 சதவீதம்; இறுதியாக 70.03 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின. கடந்த 2019ம் ஆண்டு, இந்த 14 தொகுதிகளில் 68.96 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.

சில இடங்களில் இரவு வரை ஓட்டுப்பதிவு நடந்ததால், ஓட்டு சதவீதம் சற்று கூடுதலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக, சிக்கோடியில் 76.47 சதவீதமும்; குறைந்தபட்சமாக, ராய்ச்சூரில் 61.81 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

ஓட்டுப்பதிவுக்கு பின், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பலத்த பாதுகாப்புடன், ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டன. அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு சதவீதம்

தொகுதி பெயர் 2024 2019

சிக்கோடி 74.39 75.62

பெலகாவி 70.84 67.84

பாகல்கோட் 70.47 70.70

விஜயபுரா - தனி 64.71 61.89

கலபுரகி - தனி 61.73 61.18

ராய்ச்சூர் - எஸ்.டி., 60.72 58.34

பீதர் 63.65 63.00

கொப்பால் 69.07 68.56

பல்லாரி - எஸ்.டி., 69.48 69.76

ஹாவேரி 72.59 74.29

தார்வாட் 69.94 70.29

உத்தர கன்னடா 73.52 74.16

தாவணகெரே 75.48 73.19

ஷிவமொகா 76.05 76.58

***






      Dinamalar
      Follow us