ADDED : மார் 16, 2025 11:13 PM

மாண்டியா: ஹோலி பண்டிகையின் போது மீதமான உணவை சாப்பிட்ட ஆறாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்.
மாண்டியா, மலவள்ளி தாலுகா டி.ககேபூர் கிராமத்தில் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது.
இதன் அருகில் உள்ள தொழிலதிபர் வீட்டில், கடந்த வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதில் மீதமான உணவு, ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து, மயக்கம் அடைந்தனர். 25க்கும் மேற்பட்டோர் மலவள்ளி தாலுகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
சிகிச்சை பலனின்றி, ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர் கெர்லாங், 13 என்பவர், உயிரிழந்தார். இதனால் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து வந்த மலவள்ளி கிராமப்புற போலீசார், சுகாதார துறை அதிகாரிகள் சோதனையை துவக்கினர். உணவில் விஷம் கலந்துள்ளதா என விசாரிக்கின்றனர்.
இறந்த மாணவனின் உடலை பரிசோதனை செய்தால் தான், இறப்பிற்கான காரணம் தெரியும். அதே சமயம் சிகிச்சை பெற்று வரும் 29 மாணவர்களும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.