பஞ்சாப்பில் 7 கிலோ ஹெராயின், 5 துப்பாக்கிகள் பறிமுதல்: பாகிஸ்தானுக்கு தொடர்பு
பஞ்சாப்பில் 7 கிலோ ஹெராயின், 5 துப்பாக்கிகள் பறிமுதல்: பாகிஸ்தானுக்கு தொடர்பு
ADDED : ஜூலை 17, 2024 11:32 AM

சண்டிகர்: பஞ்சாப்பில் 7 கிலோ ஹெராயின் மற்றும் 5 துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இருவரை கைது செய்தனர். விசாரணையில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து பஞ்சாப் மாநில டி.ஜி.பி., கவுரவ் யாதவ், எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: போதைப்பொருள் கடத்தல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அமிர்தசரஸ் பகுதியில் சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு நபர்களை கைது செய்தனர். 7 கிலோ ஹெராயின் மற்றும் 5 துப்பாக்கிகளை மீட்டனர்.
பாகிஸ்தானுக்கு தொடர்பு
விசாரணையில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் சிங் மான் உத்தரவின் படி, போதைப்பொருட்கள் கடத்தலை தடுத்து நிறுத்தி, பஞ்சாப்பை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு டி.ஜி.பி., கவுரவ் யாதவ் கூறியுள்ளார்.